அல்லாஹ் உன்னை போற்றி புகழ்ந்திடுவோம்
அண்ணல் நபி மேல் ஸலவாத்துரைப்போம்
நம் மடவளை மதீனா தேசியக் கல்லூரி
நல்லறிவகமாய் ஒளிதர அருள்வாய்
(நம் மடவளை...)
பல்களையும் பயின்றி பண்பாடடைவோம்
பார் புகழும் இஸ்லாமிய வழி நடப்போம்
நல்லொலுக்கமும் நேர்மையும் காத்திடுவோம்
நம் கலையகம் தரும் பயிற்சில் உயர்வோம்.
(நம் மடவளை...)
விஞ்ஞானம் விளையாட்டிலும் தேர்ந்திடுவோம்
வெல்லும் கட்டுப்பாட்டினைப் பேணிடுவோம்.
அஞ்ஞான இருள் கலையும் மறையாம்
அல்குர்ஆனை ஓதி உணர்ந்திடுவோம்.
(நம் மடவளை...)
சிங்களம், தமிழ், முஸ்லிம் எனும் இணைப்பில்
சிந்தைமலர் சமய ஒற்றுமை உணர்வில்
பேர்மேவும் பணிக்கெமை அர்ப்பணிக்கும்
பேரூக்கம் தரும் நம் கலையகமாம்
(நம் மடவளை...)
அறிவூட்டும் நல்லாசிரியரை மதிப்போம்
அன்னைதந்தை அன்பினையே துதிப்போம்.
நிறைவூட்டும் தாய் நாட்டுப் புகழ் இசைப்போம்
நெஞ்சம் மகிழ் எதிர்காலம் தனைப் பெறுவோம்
(நம் மடவளை...)









